இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

மரபு, புதிய கவிதையில் ஆளுமை கொண்ட கல்வயல் வே. குமாரசாமி:-

1kal

ஈழத்தின் மூத்த கவிஞரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை விரிவரையாளருமாகிய கல்வயல் வே.குமாரசாமி நேற்று இரவு காலமானார்.இவர் தமிழின் மரபுக் கவிதையிலும் புதிய கவலிதையிலும் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
.
கல்வயல் வேதவனப் பிள்ளையார் கோவில் சூழலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் (சனவரி 1, 1944 – திசம்பர் 10, 2016)  அவர். சங்கத்தானையில் வசித்து வந்தார். தபால் திணைக்கள தபால் அதிபராகப் பணியாற்றினார்.  தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்ட இவர் ஆசிரியர் கலாசாலையில் சில காலங்கள் வருகை விரிவுரையாளராகத் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

மரபு மற்றும் நவீன கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.

சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாப்பாப்பா, பாடு பாப்பா, பாலர் பா, முறுகல், சொற்பதம் முதலியன இவர் எழுதிய நூல்கள் ஆகும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.