உலகம் பிரதான செய்திகள்

குர்திஸ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய 235 பேர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குர்திஸ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய 235 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துருக்கியின் உள்துறை அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குர்திஸ் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல்லில் கால்பந்தாட்ட மைதானமொன்றுக்கு அருகாமையில் அண்மையில்  நடத்தப்பட்டிருந்த தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னரே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, துருக்கியின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டுமென ஒஸ்ட்ரியா தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.