குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றின் உத்தரவினை மீறி அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அம்பிட்டியே சுமன தேரர் கைது செய்யப்பட்டார்.
சுமன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளார். 50000 ரூபா சரீர பிணையிலும் தலா ஐந்து லட்சம் ரூபா சரீர பிணையிலும் அம்பிட்டியே சுமன தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment