இலங்கை பிரதான செய்திகள்

பிரதமருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. அலரி மாளிகையில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் பணியாளர்கள் போராட்டமொன்றை நடத்திய போது ஊடகவியலாளார் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமருடன் கடற்படைத் தளபதி பேச உள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விரிவான அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் ஒப்படைத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap