குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில் அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment