குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலிச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு போலியான பொய்ச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்தளையில் நடைபெற்ற நீதவான்களின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகளவில் இழிவுபடுத்தப்படும் நபராக தாம் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment