குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் அடுத்த மாதம் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி கொழும்பில் நடத்தப்பட உள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளிவிவகார அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்டப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர்.
வாரமொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள மீன்பிடித்துறை அமைச்சர் மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment