இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பில் சிபிஐ விசாரணை கோரி பிரணாப் முகர்ஜியிடம் சசிகலா புஷ்பா நேரில் மனு

முன்னாள் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நாடாளுமன்ற உறுப்பினர்    சசிகலா புஷ்பா நேரில் மனு அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக  தெரிவித்து வரும் சசிகலா புஷ்பா ,  அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியில்  தங்கியுள்ள  சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் இன்றையதினம் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். அடுத்து இந்தியப்பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.