குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வா்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு இறந்துள்ளாா். குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயா்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளாா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்
Spread the love
Add Comment