குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுடன் தாம் சில தடவைகள் பேசியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். லசந்தவுடன் மஹிந்த தொலைபேசியில் உரையாடும் ஓடியோவொன்று அண்மையில் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விடயம் புதிய விடயமல்ல எனவும் சில தடவைகள் லசந்தவுடன் தாம் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லசந்த ஊடகவியலாளர் என்பதனால் ஏனைய ஊடகவியலாளர்களைப் போன்றே தொலைபேசி உரையாடல்கள் பதியப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment