இந்தியா பிரதான செய்திகள்

இவ்வருட முதல்பாதியில் முகப்புத்தகத்திடம் இருந்து இந்திய மத்திய அரசு 6,324 முறை தகவல்களை பெற்றுள்ளது

 

இவ்வருட முதல் பாதியில் சமூகவலைத்தளமான முகப்புத்தக நிறுவனத்திடம்  இருந்து இந்திய மத்திய அரசு 6,324 முறை தகவல்களை கேட்டு பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடும் நபர்கள் குறித்த தகவல்களை சமூகவலைத்தளமான முகப்புத்தகத்திடம்  இருந்து உலக நாடுகள் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது  வழமையானதொரு விடயம் என்றதன் அடிப்படையில்  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்திய அரசு அதிக அளவில் தகவல்களை பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முகப்புத்தக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிடம் இருந்து  வந்த கோரிக்கைக்கேற்ப 2,034 பதிவுகளை தடை செய்ததாகவும் அதில் பெரும்பாலானவை மத ரீதியான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் அடங்கிய பதிவுகள் மற்றும்  இந்தியாவின் சட்டங்களை மீறி வெளியான பதிவுகள் எனவும் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.