இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்காக கட்டப்பட்டபடும் வீடுகள் முறைகேடு காரணமாக இடை நிறுத்தம்

கண்டி மாவட்டம் தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் (கந்தலா தோட்டம்) கடந்த 2009 ஆம் ஆண்டு மண்சரிவினால் சுமார் 40 குடும்பங்களை  சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி தோட்ட  பாடசாலையில் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

அதைனை தொடர்ந்து அடிக்கடி ஏற்பட்ட மண்சரிவினால் மேற்படி நிலமை பல முறை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக இந்த மக்களுக்கு புதிய தனி வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 40 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டது.

தற்போது இந்த வேலைத்திட்டம் முறையாக இடம் பெறவில்லை¸ தங்களுக்கு தேவையான ஆலயம்¸ பாடசாலை¸ வைத்தியசாலை¸ பிள்ளை பராமரிப்பு நிலையம் இல்லை¸ வேலைக்குச் செல்வது என்றால் 04 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும்¸  கட்டபடும் வீடுகளுக்கான காணி 7 பேர்ச் என கூறப்பட்டாலும் அந்த அளவு காணி இல்லை¸ கட்டப்படும் வீடுகளுக்கு முன்னால் போதிய இட வசதிகள் இல்லை¸ கட்டிட நிர்மானங்களில் பாவிக்கபடும் மூலப் பொருட்களில் தரம் இல்லை¸ பாதிக்கபட்ட குடும்பங்களி;டம் சில வேலைகளுக்கு காசு கேட்டல்¸ போன்ற இன்னோரன்ன குற்றச்சாட்டுகளை வைத்து மேற்படி பாதிக்கபட்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் வீடுகளை பொறுப்பேற்க மாட்டோம் என கூறியுள்ளனர்.

இதனால் இந்த வேலை திட்டத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு பெருந்தோட்ட மனிதவல அபிவிருத்தி நிதியம் பணித்ததற்கு இணங்க தற்போது வேலைதிட்டம் இடை நிறுத்தபட்டுள்ளது.

இந் நிலமை தொடர்பில் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிகல் நாட்;டிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது. நான் இங்கு ஏற்பட்டிருக்கும் முறைக்கேடு தொடர்பாக சமபந்தபட்ட அமைச்சருக்கும் மனித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களுக்கும் முறைபாடுகளை மேற்; கொண்டு இருக்கிறேன். அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். என்னை பொறுத்தவரையில் இந்த வீடுகள் அமைப்பதில் முறைகேடு  இடம்பெறுவதனை அங்கீகரிக்க போவது இல்லை. இவர்களுக்கு முறையாக வீடு அமைத்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பெருந்தோட்ட மணித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களிடம் வினய போது. ஆம் இந் வேலைதிட்டம் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் மேற்படி குறைபாடுகளை மக்கள் முறையிட்டதற்கு இணங்கவும். தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைகளின் தரத்தினை பரிசோதிப்பதற்குமாகும்.

இன்னும் ஓர் இரு தினங்களில் நானும் எமது அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து இந்த பாதிக்கபட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களின் விருப்பத்திற்கு அமைய வீடுகள் அமைக்க ஒதுக்கிய பணத்திற்கு பெறுமதியான வீடு கிடைப்தற்கு நடிவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கபட்ட நிதியைவிட மேலும் இவர்களுக்கான உட்டகட்டமைப்பு வசதிகளை மேற் கொள்ள பணம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும்  அமைக்கபட்டு வரும் வீடுகள் தோட்ட நிர்வாகத்தினால் தெரிவு செய்யபட்ட குத்தகையாளர்களிடமே வழங்கபட்டுள்ளது. இவர்களில் ஏதும் முறைகேடு இருந்தால் புதிய குத்தகையாளர்கள் நியமிக்கப்படுவார்கள எனவும் அவர் தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap