இலக்கியம் பிரதான செய்திகள்

இலங்கையின் முதலாவது கிராம சபைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்த நிதி திட்ட அமுலாக்கம் :

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது கிராம சபைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் பொருள் பதித்து வட மாகாண சபையூடாக நல்லின ஆடுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக தேவையறிந்து மட்டக்களப்பில் 08 குடும்பங்களுக்கு நிரந்தர பொருளீட்டலுக்கான முயற்சிக்காக செயல் திட்டமொன்று  மனித நேயக்கரங்கள் நிறுவனத்தின் ஊடாக அறிமுகம்  செய்யப்பட்டது.

அத்திட்டத்தின் கீழ் :

1) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பும் அல்லது அவர்களால் இயலுமான சுய தொழிலைச் செய்ய உதவுதல்.

2) அவர்கள் சுயமாக தனது தொழிலைக் கொண்டு நடத்தும் வரை தேவையான உதவிகளைச் செய்தல்.

3) அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல். பிள்ளைகளுக்கு இலவச தனியார் வகுப்புக்களையும் கருத்தரங்குகளையும் நடாத்துதல்.

4) உயர் கல்வி செயற்பாடுகளுக்கு வழிகாட்டல்.

எனப்ப ல நல் நோக்கங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 8 பணனாளிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த,

01 இராமலிங்கம் பத்மநாதன் – நெடியமடு, உன்னிச்சை
02 ராசா அன்னபாக்கியம் – விஸ்ணு ஆலய வீதி, கிரான்
03 கந்தசாமி பிரசாந்தன் – ஐயங்கேணி, செங்கலடி
04 வ.ரகுலேஸ்வரன் – ரமேஸ்புரம், செங்கலடி
05 பரமக்குட்டி சாமுவேல் – வாகனேரி, வாழைச்சேனை.
06 தம்பிராசா ஜெயலெட்சுமி – கித்துள்வௌ, கரடியனாறு.
07 சுப்பையா முத்துலெட்சுமி – பிரதான வீதி, செங்கலடி.
08 யோகநாதன் பரமேஸ்வரி – நாவற்குடா, மட்டக்களப்பு.

ஆகியோர், நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தவர்களால், பின்வரும் தொழில் முயற்சிகளுக்காக 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவை உதவியாக பெற்றுள்ளனர்.

பெயர் –                                   செய்ய விரும்பும் தொழில் – வழங்கப்பட்ட தொகை
தம்பிராசா ஜெயலட்சுமி  –            சிறிய கடை                                             ரூபா.50000
சுப்பையா முத்துலெட்சுமி –       மரக்கறித்தோட்டம்                              ரூபா.50000
யோகநாதன் பரமேஸ்வரி –       ஆடு வளர்ப்பு                                            ரூபா.50000
இராமலிங்கம் பத்மநாதன் –       கோழி வளர்ப்பு                                        ரூபா.50000
ராசா அன்னபாக்கியம்        –  கோழி வளர்ப்பு                                                ரூபா.50000
கந்தசாமி பிரசாந்தன்            கோழி வளர்ப்பு                                                  ரூபா.50000
வ.ரகுலேஸ்வரன்             சீமெந்து தூண் அறுத்தல்                                   ரூபா.50000
பரமக்குட்டி சாமுவேல்            தோட்டம் செய்தல்                                    ரூபா.40000
யோகநாதன் பரமேஸ்வரி            ஆடு வளர்ப்பு                                           ரூபா.50000

மொத்தம் ரூபா.                                                                                                                 390000

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.