ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஜெயலலிதா உயிரிழந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் ஒருவரும் ஆதரவாளர்கள் சிலரும் அ.தி.மு.கவின் தலைமையகத்திற்கு சென்ற வேளை அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்கேஸ்வரரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Spread the love
Add Comment