உலகம் பிரதான செய்திகள்

35 ரஸ்ய தூதரக அதிகாரிகளை 72 மணித்தியாலத்தினுள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒபாமா உத்தரவு – பதிலடி கொடுக்கப்படும் – ரஸ்யா

ரஸ்யாவைச்  சேர்ந்த 35 தூதரக அதிகாரிகளை  பேரை பதவிநீக்கம் செய்த  ஜனாதிபதி ஒபாமா அவர்களை  72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதத் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஸ்யா  ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ரஸ்யாவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக மோசடி செய்து  கண்ணிகளுக்குள்  நுழைந்து மோசடி செய்து விட்டதாக  குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வேட்  ஸ்னோடன், இந்த  குற்றச்சாட்டை  தெரிவித்ததுடன் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதித்  தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  வோஷிங்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து  35 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் குடும்பங்களுடன் 72 மணித்தியாலத்துக்குள்  அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை 35 தூதரக அதிகாரிகளை வெளியேற்றியமைக்கு அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவின் பதில் நடவடிக்கை, அமெரிக்காவுக்கு பெருமளவு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என ரஸ்ய ஜனாதிபதி புதினின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers