இந்தியா பிரதான செய்திகள்

பீகார் சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்

பீகாரின் தலைநகர் பாட்னா அருகே உள்ள புக்சர் மத்திய சிறைச்சாலையிலிருந்து 5 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும் அங்குள்ளவர்கள் உதவியதன் காரணமாகவும் கைதிகள் தப்பி இருக்கலாம் என்று  தெரிவிக்கப்படுகின்றது.    நேற்று நள்ளிரவு தப்பி ஓடிய 5 கைதிகளில் 4 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதிகள்  சுவரில் துளை தப்பி சென்றுள்ளனர்  எனவும் அந்த இடத்தில் இரும்பு கம்பி, பைப், மற்றும் வேட்டி ஆகிய பொருட்கள்  காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதிகள் தப்பியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில்  காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply