இலங்கை

எங்கு என்ன சந்தை அமைப்பது என்பதில் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே முடிவு: வடக்கு முதலமைச்சர்:-

Wicki_CI

எங்கு எவ்வாறான சந்தையை அமைப்பது என்பது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
வடக்குக்கான பொருளாதார மையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்த குளத்தில் மரக்கறி சந்தையும் நிறுவப்படும் என்ற செய்தி மக்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் தெரிவித்திருப்பதாவது:

“இது குறித்து எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன.

எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமான தீர்மானம், ஆலோசனைகள் பெற்ற பின்னர்  எம்மால் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படாத ஒரு விடயம் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap