இலங்கை

நல்லிணக்கப் பொறிமுறையில் பாரபட்சமற்ற சமமாக நடத்தப்படுகின்ற சூழலை உருவாக்குங்கள்

கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் கோரிக்கை – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி

நல்லிணக்கப் பொறிமுறையில் பாரபட்சமற்ற சமமாக நடத்தப்படுகின்ற சூழலை உருவாக்குங்கள்

அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்கள் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

29-07-2016 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவா்கள் மேலும்  கோரியுள்ளதாவது

நல்லிணக்கம் என்ற புதிய எண்ணக்கரு இன்று இலங்கைச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் பேசுபொருளாகவும் இருக்கிறது இந்த நீரோட்டத்தில் கிளிநொச்சியில் குறித்த கால தொடர்ச்சியோடு வாழ்ந்துவரும் மலையக தமிழர் என்ற சமூகத்தைச்சேர்ந்த நாங்கள் இணைந்து இந்த நாட்டின் நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் கட்டியெளுப்பவும் விரும்புகின்றோம்.

இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதோடு இனங்களுக்குள்ளேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒவ்வொரு சமூகமும் தங்களுடைய  அடையாளத்துடன் தனித்துவமாக வாழும் நிலைமை உருவாக வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் எமது சமூகத்தினர் பெரும்பாலாக வாழ்ந்து வருகின்றனர் இதில் குறிப்பாக சொல்வதென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் அனேக கிராமங்களில் அனேகமாக நாமே வாழ்கின்றோம் எம்முடைய பரம்பரை இலங்கை வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் திகழ்கின்றது பருமட்டாக பார்க்குமிடத்து 60 சனத்தொகையை எமது சமூகம் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் ஏறத்தாள பெரும்பாலான கிராமங்களில் நாங்கள் பல்வேறு பொருளாதார சமூக கலாச்சார அரசியல் வாய்ப்பு அற்றவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் மேற்கொள்ளவுள்ள நல்லிணக்க முறைமைகளில் நாங்கள் சமமாகவும் சுபீட்சமாக வாழவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

கடந்த முப்பது வருட யுத்த காலத்தில் நாங்கள் கணிசமாக நாங்கள் அதிகமாக பாதிக்கபட்ட எமது சமூகம் பின்வரும் விடையங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

             அரசியல்  பிரதிநிதித்துவம் -.

             ஓரங்கட்டப்படுதல்- -.

             காணி-.

             கல்வி-

             உட்கட்டுமானம்-

             தொழில்வாய்ப்புக்கள்-

             கலாச்சாரம்-

போன்ற விடயங்களில் எமது நாம் தொடா்ந்தும் புறக்கணிக்கப்பட்டும், நியாயமான வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்படாதும் பாரபட்சமாக நடத்தப்படுகின்ற நிலைமை தொடா்ந்தும் காணப்படுகிறது. எனவே கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் தங்களுடைய மரபுரிமைகளை வாழ்க்கை முறைமைகளில் பொருளாதார கட்டமைப்புக்களை மொழி உரிமைகளை கலாச்சார செயற்ப்பாடுகளை எவ்வித அச்சமோ தயக்கமோ இன்றி கட்டியெழுப்பவும் பேணவும் இந்த சமூகச்சூழலும் பௌதிக சூழலும் உளவியல் சூழலும் ஏற்ப்படுத்தப்பட வேண்டும்.
சக சமூகத்தினரால் மறைமுகமாக ஓரங்கட்டப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் ஏளனப்படுத்தப்படுத்தும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது இதனால் உள பொருளாதார சமூக சம நிலையை நாம் பேணுவதற்க்கு உருவாக்கப்படுகின்ற நல்லிணக்க பொறிமுறை வழிவகுக்க வேண்டும். என்பது எமது நீண்டகால எதிர்பார்ப்பாகும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link