குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சியே பாத யாத்திரை செல்கின்றார்கள் என கடுவெல நகரசபையின் முன்னாள் நகரசபைத் தலைவர் எச்.புத்ததாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் விமல் வீரவன்ச தம்பதியினர் சிறைக்குச் செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ பாத யாத்திரை சென்று பழகியவர் என்ற போதிலும் அதற்கு தாம் ஏமாற்றமடையப் போவதில்லை என தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே விமல் வீரவன்சவின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment