இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் பியசேனவிற்கு விளக்க மறியல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் பியசேனவிற்கு விளக்க மறியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
வாகன மோசடி ஒன்று தொடர்பில் பியசேன கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன் போது பியசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னரும் அரச வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை என கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply