குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவிடம் நீண்ட விசாரணை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்காக ஐந்து பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய நிறுவனமொன்றிடமிருந்து எவ்வித ஆய்வும் செய்யப்படாது பாரியளவில் அரிசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Add Comment