இந்தியா

எல்லைதாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு:-

எல்லைதாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு:-

பஞ்சாப் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த 3பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் மாவட்டத்தின்தர்யா மன்சூர் பகுதி அருகேயுள்ள இந்தியா-பாகிஸ்தான்எல்லையோர கிராமமான அஞ்லாவில் உள்ள காவல் சாவடியில்நேற்றிரவு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல்காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து சில தீவிரவாதிகள்இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை திரும்பிச்செல்லும்படி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் விடுத்தஎச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினரைநோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி அவர்கள் முன்னேறிசென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நடத்தியஎதிர்தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவர் பாகிஸ்தான் எல்லைக்குள்தப்பியோடியதாகவும், கொல்லப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதிகள் மூவரும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply