உலகம் பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஹிலரி ஏற்றுக்கொண்டார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஹிலரி ஏற்றுக்கொண்டார்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஹிலரி கிளின்ரன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரி;க்காவின் பிரதான கட்சியொன்றின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி என்பது குறிப்பிடத்கத்கது.
சில பலம்பொருந்திய தரப்புக்கள் தம்மை வேட்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ள அவர் ஒன்றாக இணைந்து செயற்படுவதனால் ஒன்றாக அனைவரும் முன்னேற்றமடைய முடியும் எனவும் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமாவுடன் ஜனாதிபதி பதவிக்காக ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அதன் பின்னர் ஒபாமா அரசாங்கத்தில் அவர் ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply