ஒலிம்பிக் கிராமத்தின் தங்குமிட வசதிகள் குறித்து அவுஸ்திரேலியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பாக உள்ளது.
விளையாட்டு வீர வீராங்கணைகள் தங்குவதற்கு வழங்கப்பட்ட தங்குமிடம் திருப்திகரமாக அமையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மலசல கூடங்கள், மின்சார வசதிகள், குழாய் வசதிகள் போன்றன உரிய தரத்தில் அமையவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Add Comment