குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொண்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை nவிளயிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை மிகவும் நேசிக்கும் முத்தையா முரளீதரன் போன்றவர்கள் அவுஸ்திரேலிய அணியில் இணைந்து செயற்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த நடவடிக்iகாயனது எந்த வகையிலும் தொழில்சார் ஒழுக்க விதிகளை மீறும் வகையில் அமயவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் ரீதியாக தீர்மானம் எடுப்பதற்கு முரளீக்கு பூரண சுதந்திரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment