
சுவிட்சர்லாந்தின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதம் ரியோ டி ஜெனய்ரோவில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெடரர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பெடரர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான பெடரர் 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் போதியளவு ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக பெடரர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment