Home கட்டுரைகள் “கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்-

“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்-

by admin

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

றைஸ் பல்கலைக்கழகத்தில் இளையவரான எனது மகன் யோவன் புதிதாக வரும் மாணவர்களுக்கான மாணவ ஆலோசகராக இருக்கின்றார். இலங்கையைப் போல் அல்லாது,அவர்களுடைய வெள்ளையினவாதமானது எப்படியெனில்,வெள்ளையினவாதிகள் தாம் சட்டம் மற்றும் வாடிக்கையின் மூலம் மறைக்கப்பட வேண்டிய கடப்பாட்டை உணர்ந்தார்கள்.இருந்த போதும், டொனால்ட் ரிறம்ட் என்பவரது வருகை எனின், அமெரிக்க இனவெறியர்கள் அப்படி ஒரு மறைக்க வேண்டிய தேவையை உணரமாட்டார்கள். பல நகரங்களில் அமெரிக்க காவல்துறையானது கறுப்பினத்தவர்களை பக்கத்திலிருப்போர் வெக்கங்கெட்ட வகையில் அதனை படம்பிடிக்க  கொன்று வருகின்றனர். ஆகவே “கறுப்பர்களின் வாழ்வு விடையம்” என்ற சுலோகத்தை உயர்த்துமாறு பல்கலைகழகம் மாணவ ஆலோசகர்களை கேட்டுள்ளது.

பதினோராம் திகதி காலை என்னை அலைபேசியில் அழைத்த எனது மகன், இந்த சுலோகம் மற்றையோரது வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என குறிப்பதாக சில பயிற்சி பெறுநர்கள் கூறுவதாகச் சொன்னார். வெள்ளையரின் வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என ஒருவரும் சொல்லுவதில்லை ஆனால் கறுப்பர்களின் வாழ்வு விடையம் என்பது உண்மையில் ஒரு விடையமே அல்ல என்றாற் போல பலர் செயற்படுகின்றார்கள் என கூறுவதன் மூலம் அவர் அந்த சுலோகத்தை நியாயப்படுத்தினார். பெரும்பாலான ஏனைய இலங்கையர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் மகிந்த யாப்பா அபயவர்த்தனவின் சிக்கலான மனநிலையிலிருந்து வெளிப்படையாகவே விலகியதாகவே இந்த பதினெட்டு அகவை கொண்டவரின் பார்வை இருக்கின்றது.  வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பிலான செயலகத்தை அமைக்க வேண்டுமென தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது,மகிந்த யாப்பா அபயவர்த்தன ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, இப்படிக் குறிப்பிடுகையில் அது ஏனைய இடங்களில் காணாமல் போதல் நடைபெறவில்லை என அர்த்தப்படும் என மகிந்த யாப்பா அபயவர்த்தன குற்றச்சாட்டை முன்வைத்தார் (Ceylon Today, 11.07.2016).

வேலாயுதபிள்ளை ரேனுகரூபன் என்ற பிரித்தானியத் தமிழர் தனது சொந்த நாடான இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது சித்திரவதைக்கு உள்ளானமை மற்றும் சந்தியாகு அன்ரன் என்ற அகவை 38 உடையவர் உயிலங்குளத்தில் கடத்தப்பட்டமை போன்ற செய்திகள் மூலம் உண்மையில் சனவரி-8 புரட்சி எங்களிடமிருந்து தூரச் செல்கின்றது எனலாம்.

 

(Shereen Saroor of Mannar Women’s Development Federation ReportsSanthiyogu Anton’s Abduction by CID)

 

மங்கள சமரவீர – நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

உள்நாட்டு நீதிபதிகளே போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ஈடுபடுவார்கள் என சனாதிபதி மைத்திரி கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தும், போர்க் குற்றத் தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தில் மங்கள இருப்பதால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி உதயகம்பன்பில மங்கள சமரவீரவை மிரட்டினார். இது மிக மோசமான விடையமாகும்.

 

சனாதிபதியின் உறுதிமொழி

கடந்த வாரம் சனாதிபதி மைத்திரி மகாசங்கம் முன்னர் என்ன கூறினார்? சனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கோள் காட்டியவாறு சனாதிபதி பின்வருமாறு உறுதியளித்தார்.

 

தாய் நாட்டின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்காகவும் செயற்பட தான் தயங்க மாட்டேன் என உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய விடையங்கள் குறித்த ஒவ்வொரு செயற்பாட்டிலும் வணக்கத்திற்குரிய மகாசங்கத்தின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயற்படுவதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என உறுதியளித்தார்.

ஒரு பௌத்தனாகவும் இந்த நாட்டின் தலைவராகவும் நாட்டின் பெருமை மிக்க வரலாற்றை மதிப்பதன் மூலம் இலங்கைச் சமூகத்தைப் பாதுக்காக்க அர்ப்பணிப்புள்ளவனாகவிருப்பேன் என உறுதியளித்திருக்கின்றார்.

 

வேலாயுதபிள்ளை ரேனுகரூபன் மற்றும் சந்தியாகு அன்ரன் போன்றவர்களை பாதுகாக்கவும் சனாதிபதியின் கவனம் திரும்பியிருக்க வேண்டும். ஏனென்றால், தமிழர்கள் நாங்களும் இந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு பாகம் என நான் நினைக்க விரும்புவதால், நாங்கள் வதைக்கப்படும் போது காப்பாற்றப்படவும் வதைக்கின்றவர்களை தண்டித்து இப்போது உயிரோடுள்ளவர்களைப் பாதுகாக்கவும் சனாதிபதி கவனமெடுக்க வேண்டும். மிருகங்களை மதித்த அளவிற்குக் கூட தமிழர்களின் உயிர்கள் மதிக்கப்படவில்லை என்பதை கடந்த கால வரலாறு காட்டுகின்றது.

இதனைப் பார்ப்பதற்கு, பெரும்பாலான சிங்களவர்களால் முக்கியமானதாக மதிக்கப்படும் மகாவம்சம் என்ற நூலை நோக்குவோம்.

 

அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போரில் வெற்றி பெற்ற பின்னர் துட்டகைமுனு மன்னன் மனவிரக்தியில் இருந்தான். உடனே, சங்கம் விரைவாகச் செயற்பட்டது. சொர்க்கத்திற்குப் போகும் வழியில் மன்னனுக்கு எந்த இடையூறும் வராது என்பதாக ஆலோசனை சொல்ல எட்டு பௌத்த ஞானிகள் உடனே அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனெனில், மன்னர் ஒரு மனிதனையும் மற்றைய ஒரு பாதியையும் தான் கொன்றானாம். ஒருவர் பௌத்தத்தில் குறிப்பிடும் மூன்று அடைக்கலங்களுக்குள் வந்தவர். மற்றையவர் பௌத்தத்தில் குறிப்பிடப்படும் ஐந்து கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வந்தவர். ஏனைய தமிழர்கள் மிருகங்களிலும் பார்க்க மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இப்படி அவர்கள் போதித்தார்கள் (Chapter. 25: 98, 103, 107-112).

 

பௌத்தம் மற்றும் வாய்மை

 

ஒரு பௌத்தனாக செயற்படுவதாக சொல்லும் சனாதிபதியின் உறுதியளிப்பு ஆறுதலளிக்கின்றது. ஏனெனில், பௌத்த பாரம்பரியத்தின் படி வாய்மையாக இருக்க வேண்டும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் காப்பளிக்க வேண்டும். எனவே இது தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் நாம் உயிர்களாக மட்டுமாவது மதிக்கப்பட்டு காக்கப்படுவோம் என்பதால்.

“இந்த இணக்கமான அரசியல் சூழலில், உங்கள் ஆற்றல்களையும் தகமைகளையும் தாய்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்துமாறு நாடு முழுவதிலும் மற்றும் நாட்டிற்கு வெளியேயும் பரந்து வாழும் இலங்கைப் புத்திசீவிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன். எனது தலைமையிலான அரசாங்கமானது தாய் நாட்டிற்குத் திரும்பி வர விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையரை ஒருங்கிணைக்க ஒரு சிறப்பு பொறிமுறையை எனது கட்டளையில் உருவாக்கி அவர்களிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்படும்”, இவ்வாறு சனாதிபதி பாராளுமன்றில்01.09.2015 அன்று ஆற்றிய கொள்கைகள் தொடர்பிலான சிறப்பு உரையில் குறிப்பிட்ட உறுதிமொழியை காப்பாற்ற அவர் தன்னை அர்ப்பணித்துள்ள பௌத்தத்தில் குறிப்பிடும் வாய்மையாக இருத்தல் என்பது உதவும்.

 

ஆனால், இது வரையிலும் எந்தவொரு சிறப்பு பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இந்த நாட்டின் புதிய பிரசைகள் இங்கு பணியாற்றுமாறு ஊக்கமளிக்கப்படுகின்றார்கள் என திரு.நாவின்னா அவர்கள் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான நிகழ்வொன்றில் கூறினார். இவ்வாறான உத்தேசிக்காத உறுதிமொழிகள் நல்ல உரைகளாகின்றன. ஆனால் மற்றைய தேசங்களிற்கு கொடுத்த உறுதிமொழிகள் பேணப்படாமல் போகும் போது அர்த்தமற்றதாகின்றது. உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு இந்திய குடியகழ்வுச் சட்டத்தின் படி, இந்தியர்கள் என்ற சமவுரிமை வழங்கப்படும் என உறுதியளித்த நாடுகளிற்கே தகமை அற்ற ஊழியர்கள் குடியகழ அனுமதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பொறுப்பேற்ற பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என நாம் எல்லோரும் அறிவோம்.

 

மேலும், அண்மையில் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அதாவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தின் பின்னர் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை குறிப்பிடின், அதில் அவர் இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு என்பன விட்டுக்கொடுக்கப்படமாட்டாது என வலியுறுத்தினார். தீவிரப்போக்கானவர்களை ஓரங்கட்டி,சனவரி-8 இல் தொடங்கிய புதிய புரட்சி காப்பாற்றப்படும் என மேலும் சனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்கா தீர்மானமும் இலங்கைக்கான பன்னாட்டுச் சமூகமும் நாட்டின் எதிர்கால நலனிற்கு இன்றியமையாதன என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

UNHRC தீர்மானத்தில் அதாவது அவர்கள் இணை அணுசரனையில் இதனை 29 June, 2015 இல் வெளியிட்ட போது,முதலாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

 

“ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர்ஸ்தானிகர் வாய்மூலமாக 27 ஆவது UNHRC அமர்வில் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் போன்றன தொடர்பானவையை ஏற்றுக்கொண்டு, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல்,இழப்பீடு வழங்கல் மற்றும் எதிர்காலத்தில் இத்தைகைய மீறல்கள் நடைபெறாது என்பதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்தல் போன்றவற்றை நிறைவேற்றியவாறு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்”

 

தீர்மானத்தின் அடிக்குறிப்பு இரண்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? “அரசபடைகள் மற்றும் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பன பற்றிய விபரங்கள் இந்த அறிக்கையில் இருப்பது தொடர்பாக நன்கு அறிகின்றோம். இந்த அறிக்கை எமது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நமது நாட்டின் நீதி அமைப்புமுறையின் தோல்விகளை விபரித்த பின்னர், 1246ஆவது பத்தியில் வெளிநாட்டின் பங்கு பெறல் இவ்விடயத்தில் தேவை என்பதாக அடித்தளம் இடப்படுகின்றது”

1246: “இலங்கையில் பொறுப்புக் கூறல் விடையம் வெற்றியளிப்பதற்கு உள்நாட்டு நீதிப் பொறிமுறை என்பதைத் தாண்டி ஒரு பொறிமுறை தேவைப்படுகின்றது என இந்த அறிக்கை நம்புகின்றது. கலப்பு நீதிமன்றம், பன்னாட்டு நீதியாளர்கள், பன்னாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் பன்னாட்டு விசாரணையாளர்கள் போன்றவற்றால் ஏனைய நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட விடையங்களிலிருந்து கற்றுக்கொண்டு விடையங்களை மேற்கொள்ள வேண்டும். பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடைபெறுகின்றது என்ற நம்பிக்கை இலங்கைச் சமூகத்திற்கு குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்படுவதற்கு இத்தகைய பொறிமுறை அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படும் இலங்கைச் சூழலில் அவசியமானது”

மேலும் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் ஆறாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது;

“இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களின் மத்தியிலும் நீதி தொடர்பான நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு,இலங்கையின் பொறுப்புக் கூறல் இன்றியமையாதது என இலங்கை ஏற்றுக்கொள்வது வரவேற்கப்படுகின்றது. பன்னாட்டு நீதிகளுக்கமைவாக இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு சிறப்புப் பொறிமுறை தேவைப்படுகின்றது. பக்கச்சார்பற்ற நேர்மையானவர்கள் இந்த நீதிப்பொறிமுறைக்கு தலைமை தாங்குதல் நம்பிக்கையான நீதி கிடைக்க அவசியமானது. பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதியாளர்கள், பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணையாளர்கள் போன்றோரின் பங்குபெறல் இலங்கையின் நீதிப்பொறிமுறைக்கு இந்த விடையத்தில் தேவை எனவும் வலியுறுத்தப்படுகின்றது”

 

எங்களது சனாதிபதியும் பிரதமரும் வெளிநாட்டுப் பங்களிப்பை ஏற்றுக்கொண்டார்கள். எமக்கான சட்ட வரையறையிலான உறுதிமொழிகளைப் பேண வேண்டும் என பௌத்தம் கூறும் வாய்மை வலியுறுத்துகின்றது. மக்களை இளவட்டப் போக்கிரிகள் போல நடந்துகொள்ளுமாறும் எங்களது அறிவுத்திறம் கொண்டோரை மதிக்க வேண்டாம் எனவும் வேறு வழியில் உள்நாட்டு எமது மக்களிடம் கூறச் சொல்லி சிலர் என்னிடம் சொன்னார்கள்.

 

அமைச்சர் சமரவீரவிற்கு வாழ்த்துகள்

 

நான் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை உண்மையான பௌத்தனாக இருப்பதற்காக வாழ்த்துகின்றேன். ஏனெனில், அமைச்சர்களில் இவர் மட்டுமே சொன்ன வாக்கை காப்பாற்றுகின்றார். தமிழர்களின் வாழ்வில் அக்கறை செலுத்துகின்றார். இவ்வாறாக, இலங்கைச் சமூகத்தைப் பாதுகாக்கின்றார். மகா சங்கத்திற்கு சனாதிபதி வழங்கிய உறுதிமொழிகளைப் பேணுமாறும் அவர் வழங்கிய உறுதிமொழிகளை மதித்துப் பேணுவதன் மூலம் உண்மையான பௌத்தனாக இருக்குமாறும் நான் சனாதிபதியை வலியுறுத்துகின்றேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More