முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வந்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் அலுவலகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்டன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment