இலங்கை

தேர்தல்முறை மாற்றம் குறித்த சிறுபான்மை கட்சிகளின் கருத்து அறியும் பொறுப்பு ரவூப்ஹக்கீடம் ஒப்படைப்பு:

தேர்தல்முறை மாற்றம் குறித்த சிறுபான்மை கட்சிகளின் கருத்து அறியும் பொறுப்பு ரவூப்ஹக்கீடம் ஒப்படைப்பு:

தேர்தல் முறை மாற்றம் குறித்த சிறபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது.
உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் வகிக்காத சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களிடம் கருத்து அறியப்பட உள்ளது.
பெற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் பிரதான கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply