
எட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை எனப்படும் எட்கா உடன்படிக்கை குறித்து இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நான்கு பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக எட்கா குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியல் கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் எட்கா உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comment