இலங்கை பிரதான செய்திகள்

மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது :

மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பறப்பாங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டட தொகுதி, ஆசிரியர் விடுதி திறப்பு விழாவும் ஆசிரியர் தின நிகழ்வும் 07.10.2016 அன்று பாடசாலையின் அதிபர் அந்தோனி வாஸ் யூட் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன், கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இணைப்பாளர் முனாபர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மடு கல்விவலயத்திற்கு மொத்தமாக 54 கட்டடங்கள PSDG, TSEP நிதியுதவியுடன் 12 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன அதில் 14 ஆசிரியர் விடுதிகளும் அடங்குகின்றது.


அங்கு உரையாற்றிய அமைச்சர் பா.டெனிஸ்வரன் மாணவர்களின் கல்வியில் வளர்வதன் மூலமே ஏற்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகளில் திருப்தி காணமுடியும் என தெரிவித்ததோடு மாணவர்கள் ஏணிப்படிகளாக இருந்து எம்மை உயர்த்தும் ஆசிரியர்களை கனம் பண்ண வேண்டும் எனவும் வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும் இதனை மனதில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.