குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

பிரித்தானிய ரயிலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் , ரயில் பணியாளர் ஒருவரிடம் கூறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் சோதனையிட்ட போது குண்டு எதுவும் குறித்த நபரிடம் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
Add Comment