அரசியல் உலகம்

இலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :

 

01-1_ci

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளைஅனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டுசெல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-cha)அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகதாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தாய்லாந்தின்பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு இன்று (08) மாலைபாங்கொக் நகரில் இடம்பெற்றபோதே தாய்லாந்து பிரதமர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

 

தாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதி கௌரவமைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனஆகியோரை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.

 

தலைவர்கள் இருவருக்கிடையிலும் நட்பு ரீதியான கலந்துரையாடலின்பின்னர் இருதரப்பு கலந்துரையால் ஆரம்பமானது.

 

இலங்கைக்கு என்றும் தாய்லாந்து அரசு வழங்கும் ஒத்துழைப்புகளைபாராட்டிய ஜனாதிபதி அவர்கள், குறிப்பாக அண்மையில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரி அனர்த்தங்களின்போது இலங்கைமக்களுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் தன்னுடைய நன்றிகளைத்தெரிவித்துக் கொண்டார்.

 

இரு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறையின் தொடர்புகளை மேலும்முற்னேற்றுவது தொடர்பில் இரு தலைவர்களும் இதன்போது விரிவாககலந்துரையாடினர்.

 

பௌத்த நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில்அனைத்து துறைகளையும் வலுவூட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டியதாய்லாந்துப் பிரதமர் அவர்கள், இரு நாடுகளுக்குமிடையில்சுற்றுலாத்துறையினை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் பலவேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும்குறிப்பிட்டார்.

 

இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இலங்கை அரசுமுன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைப்பற்றி தெளிபடுத்திய ஜனாதிபதிஅவர்கள், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்கு தமதுஅரசு முன்னுரிமை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பினைஉருவாக்குவதன் மூலமும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினைஉறுதிப்படுத்தி, சுதந்திரமான ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்புவதையேஎதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

இரண்டாவது தடவையாகவும் தாய்லாந்திற்கு விஜயத்தினை மேற்கொண்டஜனாதிபதி அவர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர்அவர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின்கீழ்இலங்கை சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் எனவும், அப்பயணத்தின்போது தாய்லாந்து நாட்டினால் வழங்கக்கூடிய அனைத்துஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு தாய்லாந்து பிரதமரால்விசேட இராப்போசன விருந்துபசாரம்

தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனஅவர்களுக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-cha) அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று(08) மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றதன் பின்னர்> இலங்கைஜனாதிபதி அவர்களுக்கு தாய்லாந்து பிரதமரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார்ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார்ஜயந்தி சிறிசேன ஆகியோரை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers