மலையகம்

ஆயிரம் ரூபா சம்பளப் போராட்டத்திற்கு வவுனியாவில் ஆதரவுப் பேரணி

ஆயிரம் ரூபா சம்பளப் போராட்டத்திற்கு வவுனியாவில் ஆதரவுப் பேரணி

 
ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை முன்வைத்து இரண்டு வாரங்களாகத் தொடர்கி;ன்ற பெருந் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் வவுனியாவில் ஆதரவுப் பேரணி ஒன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

வவுனியா மக்களின் ஆதரவுடன் பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முடிவின்றி தொடர்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி முடிவுகாண வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றும் இந்தப் பேரணியின் முடிவில் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஏற்பாட்டுக் குழுவினரால் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை காலை வவுனியா சிந்தாமணிப்பிள்iயார் கோவிலடியில் இந்தப் பேரணி ஆரம்பமாகி வவுனியா கச்சேரியில் மகஜர் கையளிப்புடன் முடிவடையும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers