குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரித்தானிய நட்சத்திர வீரர் அண்டி மரே வெற்றியீட்டியுள்ளார். 2016ம் ஆண்டு சீன ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பல்கேரியாவைச் சேர்ந்த Grigor Dimitrov வை வீழ்த்தி, மரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த வெற்றியானது மரேயின் நாற்பாதம் டென்னிஸ் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 6-4 7-6 (7-2) என்ற செற் கணக்கில் Grigor Dimitrov வை வீழ்த்தி மரே வெற்றியீட்டியுள்ளார்.
இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என மரே தெரிவித்துள்ளார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட Grigor Dimitrov மிகச் சிறந்த சவாலை வழங்கியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment