குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தையே பெற்றுக்கொள்ளும் என ஜே.என்.பி.யின் ஊடகச்செயலாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
சிறிசேன தலைமயிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மூன்றாம் அல்லது நான்காம் இடத்திற்கு தள்ளப்படலாம் எனவும் இதன் காரணமாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பின்போடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளராட்சி மன்றங்களில் அரசியல் பிரமுகர்கள் நிர்வாகம் செய்தால் தற்போதைய வரட்சி போன்ற நிலைமைகளின் போது அவர்களின் ஒத்துழைப்பினை காத்திரமான வழிகளில் பெற்றுக்கொண்டிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
Add Comment