இலங்கை பிரதான செய்திகள்

வயதானவர்களை பயமுறுத்தி முரசுமோட்டையில் திருடர்கள் கைவரிசை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கிளிநொச்சி
kk1
கிளிநொச்சி முரசுமோட்டை  பழையகமம்  பகுதியில் உள்ள வீடொன்றில்  11.10.2016 அதிகாலை  பன்னிரண்டு  நாற்பது மணியளவில் முகத்தினை  மறைத்துக்கட்டியவாறு  வீடொன்றினுள்  புகுந்த  திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால்  அடிப்போம்  எனப்பயமுறுத்தி  வீட்டிலிருந்த  இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள்  என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்த  வயதான பெண்   தெரிவிக்கையில் இன்று அதிகாலை  பன்னிரண்டு  நாற்பது மணியளவில் நாய்கள்  குரைத்ததாகவும்  அதனை    தான்   வெளியில் வந்து பார்வையிட்டபோது  திடீர் என  கைகளில் கொட்டன்களுடன்  நுழைந்த  மூவர்  தனது    கைகளை பிடித்த வாறு சத்தம் போட்டால்  அடிப்போம் என  கொச்சை தமிழில் உரையாடிய அவர்கள்  வீட்டினுள்  அழைத்துச் சென்றதாகவும்
kk4
பின்னர்   கணவனையும் தன்னையும்   பிடித்து ஒரு இடத்தில்  இருத்திவிட்டு  வீட்டின் மின்குமிழ்களை அடித்து உடைத்துவிட்டு    முப்பதுநிமிடமாக வீட்டினை சல்லடை போட்டு  வீட்டில் இருந்த  இருபதாயிரம் பணம் மற்றும் மூன்று பவுன் சங்கிலி , இரண்டுபவுன் சங்கிலி ,அரைப்பவுண்  மோதிரம் உள்ளடங்கலாக  ஐந்தரைப் பவுன் நகைகள்  என்பவற்றையும்  திருடிச் சென்றுள்ளதாகத்  தெரிவித்தார்

அதற்கிடையில் கணவனுக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதாகவும்  அதில் தம்மை  கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் காற்று விசுக்குவதற்கு மட்டை என்பவற்றையும் எடுத்துக் கொடுத்ததாகவும்  தெரிவித்தார்

kk6

குறித்த சம்பவம் தொடர்பாக  இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைய  கிளிநொச்சி பொலிஸ் நிலைய  குற்றத்தடுப்புப் பிரிவினர்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்

kk9

kk10

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.