குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை பிரசல்ஸிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதன் போது ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வது குறித்து மீளப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் பின்னர் பங்களாதேஸ் ஆடைக்கைத்தொழில் ஏற்றுமதியில் கணிசமான அளவு அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment