குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
விசாரணைகளுக்கு அஞ்சி பாடசாலை அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொஸ்வத்த காவல் பிரிவிற்கு உட்பட்ட பொதலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மினுவன்கொட கொட்டாதெனியாவ பிரதேச பாடசாலை ஒன்றில் இவர் அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த அதிபரிடம் விசாரணை நடத்துவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த குறித்த அதிபர் திடீரென எழுந்து வீட்டின் பின்பகுதிக்குச் சென்று விசமருந்தியுள்ள அவரை உடனடியாக அவரை மாரவில வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தைச் சேர்ந்த சிலரினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் அதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Add Comment