விளையாட்டு

ஷங்காய் மாஸ்டேர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் தோல்வி

Novak Djokovic of Serbia reacts after defeating Mischa Zverev of Germany in their men's singles quarterfinal round match during the 2016 Shanghai Rolex Masters tennis tournament in Shanghai, China, 14 October 2016. Novak Djokovic defeated Mischa Zverev 2-1 (3-6, 7-6, 6-3).

சீனாவில் நடைபெற்று வருகின்ற ஷங்காய் மாஸ்டேர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில்  நேற்று  இடம்பெற்ற  அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முதற்தர வீரரான சேர்பியாவின் ஜோகோவிச் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரொபர்டோ போடிஸ்ரா அகுத்(Roberto Bautista Agut )திடம் தோல்வியை சந்தித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற  இந்த ஆட்டத்தில் அகுத் 6-4 , 6-4 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை  தோல்வியடையச் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  கோவிச்சுடன் 6-வது முறையாக  போட்டியிட்ட போடிஸ்ரா அகுத், பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் அன்டி முர்ரே 6-4, 6-3 என்ற நேர்செட்டில்  பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு சென்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அன்டி முர்ரே-பாடிஸ்டா அகுத் ஆகியோர்  போட்டியிடவுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers