1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியுள்ளனர்.
Spread the love