குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக மற்றுமொரு மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர். பூகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 240 மில்லியன் ரூபா பெறுமதியான அதி சொகுசு வீடு ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்தக் காணியின் உறுதி தமது பெயரில் இருந்தாலும் உண்மையான உரிமையாளர் பசில் ராஜபக்ஸவே என கட்டிடக் கலைஞர் ஒருவர் பூகொட நீதிமன்றில் தெரிவித்துள்ளார். வீட்டை நிர்மானம் செய்வதற்கு தமக்கு ராஜபக்ஸ பணம் வழங்கினார் என கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவரும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பெசில் ராஜபக்ஸவிற்கு எதிராக விரைவில் மற்றுமொரு விசாரணை நடத்தப்படவுள்ளது.
Spread the love
Add Comment