குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நாட்டில் மின்சார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நேற்றைய தினம் சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலைய மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தேசிய நீரோட்டத்திற்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள மக்கள் பழகிக்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Add Comment