இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19-ம் திகதி தேர்தல் :

தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே 16-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் பேரவைத் தொகுதிகளில வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டமை காரணமாக  தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருந்தது.

tamil-nadu-election

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.எம். சீனிவேல் மரணமடைந்தமையால் அங்கும் தேர்hல் நடத்த வேண்டியுள்ளமதால் குறித்த தொகுதிகளில் நவம்பர் 19-ம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும்  வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22ம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.