இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வெளி மாகாணங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்களை திருப்பிபெறுவது தொடர்பான சர்ச்சை முடிவு

14724455_681882401990623_6521162765052916027_n
கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற  கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு நாளையுடன் முடிவடையவிருந்த நிலையில்  குறித்த சர்ச்சை நிறைவுக்கு வந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சுக்கு இன்று நேரடியாக சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கல்வி அமைச்சு செயலாளரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற முடிந்ததாக முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் கல்வியமைச்சுக்கு சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கல்வியமைச்சின் செயலாளர்  சுனில் ஹெட்டியாராச்சியை சந்திக்க சென்ற  வேளை அவர் கூட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும்  தமக்கு இறுதி முடிவு கிடைக்கும் வரை கல்வியமைச்சை விட்டு வெளியேறப் போவதில்லை என தெரிவித்ததனைத் தொடர்ந்து  உடனடியாக வந்து முதலமைச்சரை சந்தித்த கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ,முதலமைச்சரின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் பிரதம ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14686505_1586472298328562_1762879591_n

இதனையடுத்து  விடயங்களை ஆராய்ந்த கல்வியமைச்சின்பிரதம ஆணையாளர் எச் எம் பண்டார மற்றும் கல்வியமைச்சின்   ஆசிரியர் பகிர்ந்தளிப்புப் பிரிவின் சிரேஷ்ட உதவி செயலாளர் குசலானி ஆகியோர் முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க வெளி மாகாணங்களில் நியமனம் பெற்ற  கிழக்கின் கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற அத்தனை ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதாக உறுதியளித்தனர் எனவும் அத்துடன் கிழக்கின் ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பற்பதற்கான காலக்கெடுவை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதாகவும் கல்வியமைச்சு உறுதியளித்தது எனவும் முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

14699880_1586472294995229_1071098793_n 14699931_1586476364994822_1841867045_n 14717161_681882178657312_7262874700629776516_n

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers