விளையாட்டு

அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக்கிற்கு போட்டித் தடை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

SHANGHAI, CHINA - OCTOBER 12:  Nick Kyrgios of Australia reacts after losing the point against Mischa Zverev of Germany during the Men's singles second round match on day four of Shanghai Rolex Masters at Qi Zhong Tennis Centre on October 12, 2016 in Shanghai, China.  (Photo by Lintao Zhang/Getty Images)

அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் Nick Kyrgios க்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு போட்டித் தொடர் வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 25000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சங்காய் மாஸ்டர்ஸ் போட்டித் தொடரில் அவர் நடந்து கொண்ட விதத்திற்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதான Nick Kyrgios போட்டியின் போது Mischa Zverev இடம் தோல்வியைத் தழுவியுள்ளார். 6-3 மற்றும் 6-1 என்ற செற் கணக்கில் Nick Kyrgios இவ்வாறு போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.  போட்டியின் போது வெற்றி பெறுவதற்கு எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளாது வெளிப்படையாகவே எதிர் வீரருக்கு வெற்றியை அளிக்கும் வகையில் மிகவும் தோய்வாகவும் கவனயீனமாகவும் Nick Kyrgios  விளையாடியிருந்தார். தாம் செய்த தவறுக்காக வருந்துவதாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் இந்தப் போட்டித் தடையை ஏற்றுக்கொள்வதாகவும் Nick Kyrgios தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.