ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா பகுதியில் மையம் கெண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
உலகின் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment