குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வழக்குகள் தொடர்பில் நிசாங்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றங்களினால் முடக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவர்p நீதிமன்றில் கோரியிருந்தார்.
லஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் சட்ட அதிகாரி இவ்வாறு வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். நீண்ட காலத்திற்கு நிசாங்க வெளிநாடு பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறெனினும் வெளிநாட்டு விஜயம் செய்ய அனுமதிப்பதாகவும் வழக்கு விசாரணைகளின் போது நிசாங்க சேனாதிபதி ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Add Comment