குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மெக்ஸிக்கோ டென்னிஸ் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக மெக்ஸிக்கோ நாட்டின் டென்னிஸ் வீரர் Daniel Garza விற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆறு மாத காலம் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 5000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
31 வயதான Daniel Garza 2015ம் ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. போட்டிகளில் விளையாடவும், போட்டித் தொடர்கள் நடைபெறும் இடத்திற்கு செல்லவோ முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ளது
Add Comment