குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
இந்தியா அமைதிப்படையினர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியதில் படுகொலையானவர்களின் 29 ஆவது நினைவு தினம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.போதனா வைத்திய சாலைக்குள் கடந்த 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி அத்துமீறி உள்நுழைந்த இந்திய அமைதிப்படையினர் கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தினார்கள். அதன் போது கடமையில் இருந்த வைத்தியர்கள் தாதியர்கள் , வைத்தியசாலை பணியாளர்கள் , நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என 68 பேர் சுட்டு படுகொலை செய்யபப்ட்டனர்.
அவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.
Spread the love
Add Comment